Monday, June 29, 2026 9:14 pm
கரூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து இராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஏற்கனவே அதிமுக உறுப்பினர்களான சி விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்பட 5 பேர் ராஜினாமா செய்ததால் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 47-இல் இருந்து 41 ஆக குறைந்துள்ளது.
கருர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமாக இருந்து வந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து தனது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வரும் நிலையில், இன்று எம்.ஆர் விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

