Friday, June 19, 2026 12:14 pm
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு வெளிநாடுகளில் இருப்பதாக நம்பப்படும் முன்னாள் அமைச்சர்களையும், பாதாள உலகக் குழுத் தலைவர்களையும் திரும்ப அழைத்து வருவதற்காக எதிர்காலத்தில் நீல அறிவிப்புகள், சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் முன்னாள் அமைச்சர்களுக்கு அல்லது பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ஒவ்வொரு பிடியாணைகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பல முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்குகளிலும் அதே சட்ட நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பொலிஸ் திணைக்களம் நீதிமன்ற உத்தரவுகளை சட்டத்திற்கு இணங்க செயல்படுத்தி வருகிறது. சந்தேக நபர்களை நாட்டுக்கு திரும்ப அழைப்பதை உறுதிசெய்ய தேவைப்படும் இடங்களில் சர்வதேச ஒத்துழைப்பை அரசாங்கம் நாடும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

