Thursday, June 18, 2026 12:14 pm
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் நேற்றைய (17) அகழ்வின் போது மேலும் 14 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 5 முழுமையாக அகழ்த்தெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 1 குழந்தையுடையதும் 1 சிறுவருடையதுமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் , இதுவரை 380 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அவற்றில் 362 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 27 ஆம் நாள் அகழ்வுப் பணிகள்நேற்று நீதவான் எஸ்.லெனின்குமார் அவர்களின் முன்னிலையில் இடம்பெற்ற நிலையில் , ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனைத் தெரிவித்தார்.
நேற்று அடையாளங்காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளுடன் இலங்கையின் பெரிய மனிதப்புதைகுழியாக செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியாகும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார்.

