Tuesday, June 16, 2026 8:49 pm
கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கும் பனிப்பாறை துண்டுகளின் எண்ணிக்கை கடந்த 2000ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் தற்போது நாலு மடங்கு அதிகரித்திருக்கிறது. கிரீன்லாந்து, ரஷ்ய ஆர்ட்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் உடைவது ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் 4.5 சதவீதம் அதிகரிப்பதால், உலக அளவில் கடல் மட்டும் உயரும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
பூமியில் ஒரு சதவீதம் மட்டுமே நிலத்தாலும் மீதியுள்ள மூன்று சதவீதம் கடலாலும் சூழப்பட்டிருக்கிறது. அதிலும் அண்டார்டிகா உள்ளிட்ட கடல் பகுதிகள் பெரும்பாலும் பனிப்பாறைகளால் சூழப்பட்டிருக்கிறது.
ஒருபக்கம் அதிக வெப்பம் காரணமாக அந்த பணிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருகிறது. இதனால் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்படியே சென்றால் ஒரு நாள் மக்கள் வசிக்கும் பகுதி முழுவதும் கடலால் மூடிவிடும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

