Wednesday, May 27, 2026 7:56 pm
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சோதனை முடிந்து அதிகாரிகள் வெளியேற முயன்றபோது, அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில், அந்த அதிகாரிகள் வந்த கார் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.
இந்தச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அதிகாரிகளின் வாகனத்தை சேதப்படுத்திய போராட்டக்காரர்களை அடையாளம் காணும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பினராயி விஜயன் மீதான சோதனையை அரசியல் பழிவாங்கலாக கருதும் கட்சித் தொண்டர்களே தாக்குதல் நடத்தினர்.

