Tuesday, May 26, 2026 3:12 pm
அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா அதிமுகவில் இருந்து விலகி தனது எம்எல்ஏ பதவியை இராஜினாமாச்ச் செய்தார். இன்று காலை சபாநாயகரைச் சந்தித்த இசக்கி சுப்பையா தனது இரஜினாமா முடிவை அறிவித்தார். கைப்பட இராஜினாமாக் கடிதத்தைத் தருமாற் சபானாயகர் கேட்டதால் இசக்கி சுப்பையா கடிதத்தை எழுதிக் கொடுத்தார்.
மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சத்யபாமா ஆகிய 3 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இசக்கி சுப்பையாவும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகினது.

