Wednesday, June 10, 2026 2:24 pm
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா , இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு , 16.5 மில்லியன் ரூபாய் தென் மாகாண சபை உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டின் கீழ் , தென் மாகாணத்திலுள்ள பொதுத் தன்னார்வ சங்கங்களுக்கு நாற்காலிகளை வழங்குவதற்காக , முறையான கொள்முதல் நடைமுறைகளை மீறி தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து , அந்நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்பட்டமைக்காகவும் , தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 54 மாகாண சபை உறுப்பினர்களின் வீட்டு அலுவலகங்களுக்கு அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட 16361 நாற்காலிகளைக் கொண்டு சென்று ஒப்படைக்கச் செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமைக்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

