Tuesday, May 26, 2026 2:41 pm
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் ஒட்டுமொத்த மாகாண சபை முறைமையையே இல்லாமல் செய்வதற்கான நிலை தற்போது தோன்றியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலைத் தமது அரசு நடத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில் பாராளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ அங்கம் வகிக்காத ஜே.வி.பி. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மாகாண சபைத் தேர்தல் 2027ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும் எனக் கூறியுள்ளமை கண்டிக்கத்தக்கது. எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

