Friday, May 15, 2026 9:34 pm
15 வயதான மாணவன் ஓட்டிச் சென்ற கார், ஒரு வழிபாட்டுத் தலத்திற்குச் சொந்தமான சுவரில் மோதி சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த மாணவனையும் அவனது தந்தையையும் அம்பாந்தோட்டை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது ,விபத்தைத் தடுக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளான்.
விபத்தில் ஈடுபட்ட வாகனத்தை அப்போது ஒரு சிறுவன் ஓட்டிச் சென்றது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
விபத்திற்குப் பொறுப்பேற்று ஆஜரான தந்தை மீது, உரிமம் இல்லாத நபரை வாகனம் இயக்க அனுமதித்த குற்றச்சாட்டும் சுமத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

