Thursday, May 14, 2026 3:29 pm
தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்கள் , த.வெ.க ஆட்சியிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் கல்வி கற்று உயர்கல்வியில் சேரும் மாணவ , மாணவிகளுக்கு பொருளாதார ஆதரவாக இந்தத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் உயர்கல்வியைத் தொடரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருவதுடன் , கல்வி இடைநிற்றல் குறைவதற்கும் உதவியாக இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் , மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி செலுத்தப்பட்டுள்ளதால் , பயனாளிகள் தங்களின் கணக்கு விபரங்களை சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

