Thursday, May 14, 2026 3:14 pm
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று (14) காலை முதல் கனத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக கொத்மலை , லக்சபான , பொல்பிட்டிய , நவலக்சபான , கலுகல , விமலசுரேந்திர , கென்யோன் , புரோட்லேன்ட் ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அத்துடன் மவுசாக்கலை , காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 39 அடியும் 28 அடி நிறைய உள்ளன.
அத்துடன் மறே நீர் வீழ்ச்சி , காட்மோர் நீர் வீழ்ச்சி , மோகினி எல்ல நீர் வீழ்ச்சி மற்றும் லக்சபான நீர் வீழ்ச்சி ஆகியவற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

