Thursday, May 14, 2026 12:25 pm
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை நினைவுகூறும் வகையிலும், யாழ் தீவகம் அல்லைப்பிட்டி படுகொலை நினைவுதினத்தை நினைவு கூறும் வகையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
இதன்போது அல்லப்பிட்டி சேமக்காலையில் உள்ள அல்லைப்பிட்டி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கஞ்சியை மாத்திரம் குடித்து உயிர் வாழ்ந்த தமிழ் மக்களை நினைவு கூறும் முகமாக வழங்கப்படும் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் அல்லைப்பிட்டி படுகொலையின் போது உயிரிழந்தவர்களின் உறவுகள் , முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினர், அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை றெக்னோ மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

