Saturday, June 27, 2026 9:10 pm
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 178 கி.மீ. ஆழத்தில் உருவானா நிலநடுக்கம் இஸ்லாமாபாத்தைத் தாக்கியதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இஸ்லாமாபாத், பஞ்சாப், கைபர் பக்துன்க்வா ,ஆசாத் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை உலுக்கியது.
இதற்கிடையில், ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவை 6.0 எனப் பதிவு செய்துள்ளதுடன், இது ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், மியான்வாலி, சக்வால், ஷங்லா, புனர், மர்தான், சார்சத்தா, ஸ்வாட், சுவாபி, மலகண்ட், பஜௌர், ஹங்கு, லோயர் திர் மற்றும் லோயர் தெற்கு வஜீரிஸ்தான் உள்ளிட்ட பரந்த பகுதியிலும், அத்துடன் அருகிலுள்ள இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது.

