Wednesday, May 13, 2026 12:04 pm
மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும் , இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும் மோதி இன்று (13) கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல , பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் , பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அம்பலாந்தோட்டை திசையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த வேளையில் , கதிர்காமம் நோக்கிப் பயணித்த லங்கம பேருந்துடன் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

