Wednesday, May 13, 2026 11:04 am
மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நுவரெலியா பிரதான நகர் , ஹவாஎலிய , கந்தபளை , நானுஓயா , ரதல்ல , தலவாக்கலை போன்ற இடங்களில் தொடர்ந்து கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் நிறைந்த காலநிலை காணப்படுகின்றன.
மேலும் இன்று (13) அதிகாலை முதல் மழையுடன் கூடிய அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் , வாகனங்களுக்கு இடையிலான தூரத்தை அவதானிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது பனிமூட்டத்தால் வீதிகளில் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் , வேகத்தைக் குறைத்து , முகப்பு விளக்குகளை (Fog Lights) ஒளிரவிட்டுச் செல்லுமாறு போக்குவரத்துப் பொலிஸார் சாரதிகளை வலியுறுத்தியுள்ளனர்.
இதில் அதிகமாக நுவரெலியா – பதுளை பிரதான வீதி , நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி மற்றும் நுவரெலியா – கண்டி பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளமையால் சாரதிகள் மிகவும் அவதாரத்துடன் செயல்பட வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால் , ஏற்கெனவே மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட நுவரெலியா – ஹட்டன் இநுவரெலியா – கண்டி , நுவரெலியா- பதுளை பிரதான வீதிகளில் சீரமைப்புப் பணிகள் தொய்வடைந்து உள்ளன எனவே குறித்த வீதிகளில் பாதுகாக்க பயணிக்க கோரிக்கை விடுத்துள்ளனர் . தற்போது காணப்படும் மாறுபட்ட இந்தக் காலநிலையின் காரணமாக கடுமையான குளிரும் நிலவி வருகிறது.

