Wednesday, May 13, 2026 1:10 pm
கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கெஸ்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் , கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடையில் 145.5 மில்லிமீற்றரும் , வத்துபிடிவலவில் 105.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
மேல் , சப்ரகமுவ , வடமேல் , வடக்கு , வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
அதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம் , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) , 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகாமையில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக , தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி , வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

