Wednesday, May 13, 2026 11:04 am
இறுதி யுத்தத்தில் ஈழத்தமிழ் மக்கள் உண்டு உயிர் வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு இன்று தமிழரசு கட்சியினால் தொண்டைமானாறு சந்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மே 11 தொடக்கம் 18 வரையான ஒரு வார காலப்பகுதியானது முள்ளிவாய்க்கால் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கஞ்சியை மாத்திரம் குடித்து உயிர் வாழ்ந்த தமிழ் மக்களை நினைவு கூறும் முகமாக கஞ்சி வழங்குவது வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று சந்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் பிரதேச உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

