Monday, May 11, 2026 8:21 pm
இஸ்ரேலியத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தெற்கு லெபனானில் போர் நிறுத்தம் செய்யவும், வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்தவும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை லெபனான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் திங்களன்று தெரிவித்தது.
லெபனானுக்கான அமெரிக்கத் தூதர் மைக்கேல் இசாவுடனான சந்திப்பில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், “போர் , இராணுவ நடவடிக்கைகளையும், வீடுகளை அழித்து புல்டோசர் கொண்டு இடிப்பதையும் நிறுத்த இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்” என்று ஜனாதிபதிஅலுவலகம் கூறியது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஊடுருவியுள்ள ஹிஸ்புல்லா உறுப்பினர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி, இஸ்ரேல் தெற்கில் உள்ள கிராமங்களை இடித்து வருகிறது.லெபனான் , இஸ்ரேலிய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு இடையே வாஷிங்டனில் நடைபெறவிருந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான “முன்னேற்றங்களையும்” ஆய்வு செய்ததாக வ் அலுவலகம் தெரிவித்தது.

