Monday, May 11, 2026 3:50 pm
வளம் மிக்க தமிழகம் மாத்திரமல்லாமல் வளமான ஈழத்தை அமைப்பதற்கும் விஜய் ஒத்துழைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு ஈழத்தமிழர்கள் பிரச்சினை தொடர்பிலும் கச்சத்தீவு தொடர்பிலும் புதிய முதல் அமைச்சர் இந்திய மத்திய அரசுடன் பேசி காத்திரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

