Saturday, May 9, 2026 1:08 pm
தவெக ஆட்சியமைக்க போதுமான ஆதரவு இல்லாத நிலையில் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நேற்று ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருபக்கம், எங்கள் எம்எல்ஏவை காணவில்லை என டிடிவி தினகரன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து குதிரை பேரம் நடக்கிறது என புகார் சொன்னார்.
அமமுக எம்எல்ஏ காமராஜ் நான் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதையடுத்து காமராஜ் காரில் அமர்ந்து தவெகவை ஆதரிப்பதாக கடிதம் எழுதிய வீடியோவை தவெக வெளியிட்டது. அதோடு, நாங்கள் யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை.. காமராஜ் முழு சம்பந்தத்துடன் தவெகவை ஆதரிக்க முன்வந்தார் என கூறியிருந்தது
இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் ‘காரில் அமர்ந்து காமராஜ் கையெழுத்திட்டது போன்ற வீடியோவை எடுத்தது யார்? அது ஏ.ஐ வீடியோவாக இருக்காலம்!.. எனது கட்சி எம்எல்ஏ ஆதரவு அளித்திருந்தால் அவரை ஆளுநர் மாளிகைக்கு ஏன் அழைத்து செல்லவில்லை? காமராஜ் கையெழுத்திட்ட அசல் கடிதம் எங்கே?.. எனது சம்மதத்துடன் கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொஅர்பாக அளுநரைச் சந்தித்த தினகரன் உண்மையை விளக்கிக்குறினார். இநத சம்பவம் தொடர்பாக பொலிஸில் புகார் செய்யப் போவதாகவும் கூறினார்.

