Friday, May 8, 2026 8:30 pm
மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்க இருக்கிறார். இன்று நடைபெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றது. இதையடுத்து, கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.
இதில், பாஜகவின் மத்திய பார்வையாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும், மத்திய இணை பார்வையாளராக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பாஜக சட்டமன்றக் குழு தலைவராக சுவேந்து அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

