Saturday, May 2, 2026 10:41 am
செல்சி அணியின் தடுப்பாட்ட வீராங்கனை மில்லி பிரைட், மகளிர் சூப்பர் லீக் கிளப்புடன் 20 கோப்பைகளை வென்ற தனது 17 ஆண்டுகால புகழ்பெற்ற விளையாட்டு வாழ்க்கைக்கு புதன்கிழமை அன்று முற்றுப்புள்ளி வைத்தார்.
செல்சி அணிக்காக நீண்ட காலம் விளையாடியவரும் , அந்த அணிக்காக 314 போட்டிகளில் விளையாடியவருமான, இங்கிலாந்தின் முன்னாள் தற்காப்பு வீராங்கனையான மில்லி பிரைட் , கிளப்பின் தூதர் , செல்சி அறக்கட்டளையின் அறங்காவலர் ஆகிய பொறுப்புகளை ஏற்பார்.
2015-ல் டான்காஸ்டர் பெல்ஸ் அணியிலிருந்து ஒப்பந்தமாகித் தொடங்கிய பிரைட்டின் குறிப்பிடத்தக்கப் பயணத்தின் உச்சமாக அவரது ஓய்வு அமைந்துள்ளது.
அவர் தொடர்ந்து 216 WSL போட்டிகளில் பங்கேற்று, நவம்பரில் ஜோர்தான் நோப்ஸின் 210 என்ற முந்தைய சாதனையை முறியடித்து, அதிக WSL போட்டிகளில் பங்கேற்றதற்கான சாதனையை படைத்தார்.
32 வயதான அவர், 2015-ல் செல்சி தனது முதல் கோப்பையை வென்றபோதும், அதனைத் தொடர்ந்து வென்ற 19 கோப்பைகள் அனைத்திலும், அத்துடன் கிளப் வென்ற எட்டு WSL பட்டங்கள் அனைத்திலும் அணியில் இடம்பெற்றிருந்தார்.
அவரது பதக்க சேகரிப்பில் ஆறு மகளிர் FA கோப்பை வெற்றிகளும், நான்கு மகளிர் லீக் கோப்பைகளும் அடங்கும். இவை 2021 ,2025-ஆம் ஆண்டுகளில் இரண்டு உள்நாட்டு மும்முனை வெற்றிகளும் அவருக்குரியவை
2023-ல் கிளப் கப்டனாகப் பெயரிடப்பட்ட பிறகு, பிரைட் 2024-25-ல் செல்சியின் தோல்வியற்ற உள்நாட்டுப் போட்டித் தொடரின்போது முன்னின்று வழிநடத்தினார், மேலும் கப்டன் பொறுப்பை ஏற்று 3,000 நிமிடங்களுக்கும் மேலாக விளையாடினார்.
உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கினார்
சர்வதேச கால்பந்தில், 2016-ல் அறிமுகமான பிரைட், இங்கிலாந்து அணிக்காக 88 போட்டிகளில் பங்கேற்று ஆறு கோல்களை அடித்தார்.
சொந்த மண்ணில் நடைபெற்ற யூரோ 2022 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு ஒரு தூணாக விளங்கிய அவர், பின்னர் 2023-ல் இங்கிலாந்தை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு வழிநடத்தினார், அதில் இங்கிலாந்து ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது.
உதைப்ந்தாட்டத்துக்கு அவர் ஆற்றிய சேவைகள், 2024 ஆம் ஆண்டின் மன்னரின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் அவருக்கு OBE பட்டம் வழங்கி அங்கீகரிக்கப்பட்டன.

