Saturday, May 2, 2026 10:39 am
வான்கூவரில் நடை பெறும் பீபா கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக, தலைவர் கியானி இன்ஃபான்டினோவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக வான்கூவர் பொலிஸ் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
“போக்குவரத்து நிறுத்தப்படும் முறையான வாகன அணிவகுப்புகள் நாட்டுத் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்டவை” என்று துணைத் தலைவர் டான் சாப்மேன் ஒ அறிக்கையில் கூறினார்.
பீபாவின் நிர்வாகக் குழுவினர், அத்தகைய பாதுகாப்புக்குத் தகுதியான சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட நபர் (IPP) தரநிலைகளைப் பூர்த்தி செய்யாததால் (சாலைகள், சந்திப்புகளை மூடுதல், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமல் இருத்தல் போன்றவை), இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது” என்று சாப்மேன் கூறினார்.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்கா ,மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கிண்ண உதைப்ந்தாட்டப் போட்டியின் 16 மைதானங்களில் ஒன்றான வான்கூவரில், உதைப்ந்தாட்ட நிர்வாக அமைப்பு இந்த வாரம் கூட்டங்களை நடத்துகிறது.
பீபா வின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கூட்டமான அதன் காங்கிரஸ், வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

