Friday, May 1, 2026 12:16 pm
கிளிநொச்சி இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய தீர்த்த திருவிழாவை முன்னிட்டு இரணைமடு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் இன்று வித்தியாசமான முறையில் காவடி எடுத்து தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர்.

இரணைமடு குளத்தில் உள்ள இறங்குதுறையில் உள்ள ஆலயத்திலிருந்து காவடியை ஆரம்பித்த மீனவர்கள் கனகாம்பிகை அம்பாள் தீர்த்தக்கரையான இரணைமடுக்குளத்தின் பகுதிக்கு சென்றனர்.
சுமார் 4 கிலோ மீட்டர் தூர பகுதிக்கு அவர்கள் படகில் காவடியில் சென்றிருந்தனர்.


