Tuesday, April 28, 2026 4:33 pm
அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் “தபோவனம்” சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த “தபோவனத்தின்” பிரதான மண்டபம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பல பெறுமதி மிக்க நூல்களும் தளபாடங்களும் எரிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வைத்தியர் தயா சோமசுந்தரம் அவர்களால் பிரதேச சிறுவர்களின் நலன் கருதி குறித்த நிறுவனம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் முன்பள்ளி சிறுவர்கள் முதல் தரம் 11 வரையான 90 க்கும் அதிகமான மாணவர்கள் கற்றல் விளையாட்டு மற்றும் இதர செயற்பாடுகளை கற்றுவரும் ஒரு நிலையமாக இருந்து வருகின்றது.

குறித்த சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

