Wednesday, April 1, 2026 2:03 pm
பேருந்தில் ஏற முற்பட்ட பெண் ஒருவர் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா – ஹட்டன் ஏ 7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவரே படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மிதிபலகையில் கால் ஒன்றினை வைத்து ஏறும் போது குறித்த பெண் தவறுதலாக வீதியில் வீழ்ந்துள்ளார்.
பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் விழுந்த பெண்ணின் கால்கள் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

