Monday, March 30, 2026 4:10 pm
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் நிலையில் அந்த கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.. ஏற்கனவே சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் தற்போது அதே சின்னம் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

