Monday, March 23, 2026 1:52 pm
அமெரிக்காவின் நியூயோர்க் விமான நிலைய ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது எயார் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள நியூயோர்க்கின் லாகார்டியா விமான நிலைய ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் 39 கி.மீ வேகத்தில் வந்த போது மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.
விமானத்தில் இருந்த பயணிகள் அவசரகால கதவுகள் வழியே பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானத்தின் முன்பகுதி தீயணைப்பு வாகனம் மீது மோதி சேதம் அடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
விபத்து சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

