Wednesday, October 28, 2026 5:09 pm
ஸ்பெயினின் மாட்ரிட்-செவில் அதிவேக இரயில் பாதையில் இரண்டு இரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என காஸ்டில்லா-லா மான்சா பிராந்தியத்தின் செய்தித் தொடர்பாளர் ஏபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி காலை சுமார் 8:30 மணியளவில், உர்தா அருகே 118-வது கிலோமீற்ற கல்லில் இந்தவிபத்து நடந்ததாகவும், மாட்ரிட்டிலிருந்து செவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரென்ஃபே , இரியோ ரயில்கள் மோதியதாகவும் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இரியோ இரயிலில் ஒரு குழந்தை உட்பட 146 பயணிகளும், ரென்ஃபே இரயிலில் 397 பயணிகளும் பயணம் செய்தனர்.

