Tuesday, March 17, 2026 2:11 pm
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது அவரிடம் சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது. வாக்குமூலம் வழங்கியதன் பின் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

