Sunday, March 15, 2026 5:03 am
நடைபெற்று வரும் மேற்கு ஆசிய பிராந்திய போரில் அயல்நாடுகளைத் தாக்குவதை தவிர்க்குமாறு ஹமாஸ் ஈரானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களில் இருந்து ஈரான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை ஆதரிப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் உள்ள அயல் நாடுகளின் தளங்களை, தன்மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்படுத்தி வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருவதும், தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதும் தெரிந்ததே.

