Wednesday, March 11, 2026 4:26 pm
வொஷிங்டன் ‘நேஷனல் மால்’ பகுதியில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கேலி செய்யும் வகையில் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜெப்ரி எப்ஸ்டீனும் “டைட்டானிக்” திரைப்படத்தின் புகழ்பெற்ற ஒரு காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலைக்கும் தலைநகருக்கும் இடையே 10 தனித்தனி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ட்ரம்பும் எப்ஸ்டீனும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன் நகரத்தின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். இவ்வாறு சிலை அமைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

