Wednesday, March 4, 2026 12:38 pm
காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கப்பலை மீட்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். குறித்த கப்பலில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விசேட கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன.
கடலில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும், கப்பலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முப்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

