Friday, February 27, 2026 3:58 pm
பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது கடந்த ஒரு நாளில் மாத்திரம் 549 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் போது 29,608 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கைகளின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 519 பேரும், மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய 309 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,392 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் 44 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

