Wednesday, February 11, 2026 12:48 pm
ஆப்கனிஸ்தானில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய ஆதரவை வழங்குவதற்காக சர்வதேச உதவி அமைப்புகளுடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செவ்வாயன்று அறிவித்தது.
சர்வதேச மீட்புக் குழு , இஸ்லாமிய நிவாரண உலகளாவிய அமைப்பு ஆகியவற்றுடன் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் மொத்தம் 1 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமாகும். கிழக்கு குனார், மேற்கு கோர் தெற்கு காந்தஹார் ஆகிய மாகாணங்களில் உள்ள 8,240 ஆதரவற்ற குடும்பங்களுக்கு இந்த உதவி பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவியில் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விநியோகம் மற்றும் பொது விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துவது ஆகியவை அடங்கும் என ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

