Tuesday, February 10, 2026 7:56 pm
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான குரூப் D மோதலின் போது நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான டிம் சீஃபர்ட் , ஃபின் ஆலன் ஆகியோர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 175 ஓட்டங்கள் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பைப் பதிவு செய்தனர்.
2022 ஆம் ஆண்டு அவு ஸ்திரேலியாவில் நடந்த ரி20 உலகக்கிண்ண அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் , ஜோஸ் பட்லர் அடித்த 170 ஓட்டங்களை இந்த ஜோடி முறியடித்தது.
ரி 20 உலகக் கிண்ணத்தில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்கள்
175 ஓட்டங்கள் – டிம் சீஃபர்ட் ,ஃபின் ஆலன் (NZ) vs UAE (2026)*
170 ஓட்டங்கள் – அலெக்ஸ் ஹேல்ஸ் ,ஜோஸ் பட்லர் (ENG) vs IND (2022)
168 ஓட்டங்கள் – ரிலீ ரோசோவ் , குயின்டன் டி காக் (SA) எதிராக பங்களாதேஷ் (2022)
166 ஓட்டங்கள் – குமார் சங்கக்கா , மஹேல ஜயவர்த்தன vs வெஸ்ட் இண்டீஸ் (2010)
154 ஓட்டங்கள் – ரஹ்மானுல்லா குர்பாஸ் , இப்ராஹிம் சத்ரான் (AFG) எதிராக உகாண்டா (2024)
ஐக்கிய அரபு எமரேட்ஸ் 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து 173 ஓட்டங்கள் எடுத்தது.
நியூஸிலாந்து 15.2 ஓவர்களில் விக்கெற் இழப்பின்றி 175 ஓட்டங்கள் எடுத்தது.

