Tuesday, February 10, 2026 10:26 am
வேலணை – அல்லைபிட்டி பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரை மோதிவிட்டு தபிச்செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஹயஸ் வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1.15 மணியளவில் சென்றுள்ளது. அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் வாகனத்தை வழிமறித்து சோதனை செய்ய முற்பட்ட போது பொலிசாரின் உத்தரவை மீறி குறித்த வாகனம், பொலிசாரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்லும் நோக்கில் அதிவேகமாக வந்தை அவதானித்த பொலிசார் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது கற்பகப் பிள்ளையார் கோவில், வட்டு வடக்கு, சித்தன்கேணியைச் சேர்ந்த அல்பினோ அருள் ஃபயாஸ் என்ற 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவத்தின் போது வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்த நிலையில் ஏனைய இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

