Monday, February 9, 2026 10:36 am
ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமா் சனே டகாய்ச்சி தலைமையிலான ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி (எல்டிபி) தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பான் பாராளுமன்றத்தின் உள்ள 465 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 316 இடங்களில் எல்டிபி கட்சி வென்றதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.
பெரும்பான்மைக்கு 261 இடங்களில் வெற்றிபெற வேண்டிய நிலையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது.
1986ஆம் ஆண்டு 300 இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்று சாதனை படைத்தது. தற்போது தனது சொந்த சாதனையை அக்கட்சி முறியடித்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய போதும், புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டக்காச்சி உறுதியளித்தார்.
இந்நிலையில் அபார வெற்றி பெற்ற சனே டக்காச்சிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

