Friday, February 6, 2026 7:39 pm
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகரில் உள்ளகதீஜா அல்-குப்ரா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாகவும், குறைந்தது 169 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த குண்டு வெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பாகிஸ்தான் தலிபான் அல்லது இஸ்லாமிய அரசு குழு போன்ற போராளிகள் நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பௌகிறது. இந்த குழுதான் நாட்டில் சிறுபான்மையினரான ஷியா வழிபாட்டாளர்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் முழுவதும் உள்ள போராளிக் குழுக்கள் பெரும்பாலும் பாதுகாப்புப் படையினரையும் பொதுமக்களையும் குறிவைக்கின்றன.

