Friday, January 30, 2026 2:54 pm
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாகவே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை, உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது. அதற்கு அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், அவர்கள் அன்று மாலையே அதனை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாகத் தீவிரப்படுத்தினர்.
இந்தச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

