Monday, May 4, 2026 5:32 pm
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காரைக்குடி தொகுதியின் வாக்கு விபரங்களை ஆராயும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி எந்தளவிற்கு மற்ற கட்சிகளை பாதித்துள்ளது என்பது தெளிவாகிறது. மாஸ் காட்டியுள்ளார்.
இத்தொகுதியில் தவெக வேட்பாளர் பிரபு 34,782 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 19,614 வாக்குகளுடனும், அமமுக-வின் தேர்போகி பாண்டி 8,920 வாக்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட சீமான் வெறும் 7,625 வாக்குகளை மட்டுமே பெற்று 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
தவெக வேட்பாளர் பிரபு வாங்கிய வாக்குகளில் நான்கில் ஒரு பகுதியை கூட சீமானால் நெருங்க முடியவில்லை என்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாற்றத்திற்கான அரசியலை பேசி வந்த சீமானின் வாக்கு வங்கியை விஜய் ஒட்டுமொத்தமாக அறுவடை செய்துள்ளதையே இந்த எண்கள் காட்டுகின்றன. சிமான் கட்டுப்பணத்தையும் இழந்தார்.
தவெக-வின் இந்த அசுர வேக வளர்ச்சி, நாம் தமிழர் கட்சியின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளது.

