Monday, July 6, 2026 1:07 pm
மனித உரிமைகள் அபிவிருத்திக்கான சர்வதேசக் குரல் மற்றும் மனித உரிமைகள் அபிவிருத்தியில் முனைவர் பட்டம் வரை தொழில்முறைக் கல்வியை வழங்கும் சர்வதேசத் தூதரக நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இம் மாநாடு நடைபெற்றது.
எதிர்காலத்தில் மனித உரிமைகளை வலுவூட்டுவது குறித்த ஒரு கலந்துரையாடலை கட்டமைக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட இம் மாநாட்டு நிகழ்வில் A.H.C குழுமத்தின் தலைவரும் சமாதான தூதுவருமான கலாநிதி நாலக சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதேவேளை இலங்கை தொழிலார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டைமான் , மனித உரிமைகள் அபிவிருத்திக்கான சர்வதேச குரல் அமைப்பின் ரகு இந்திரகுமார், சர்வதேச கிரிகெட் நடுவர் குமார் தர்மசேன உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

