Friday, April 17, 2026 9:00 pm
லெபனான் மீது குண்டு வீசுவதை இஸ்ரேலுக்கு அமெரிக்கா “தடை செய்துள்ளது” என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டதாக அவர் அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
“இஸ்ரேல் இனி லெபனான் மீது குண்டுவீசாது. அவ்வாறு செய்வதிலிருந்து அமெரிக்கா அவர்களைத் தடுத்துள்ளது. என்று ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
லெபனானுடன் இணைந்து செயல்படுவோம் என்றும், “ஹிஸ்புல்லா நிலைமையை உரிய முறையில் கையாள்வோம்” என்றும் ட்ரம்ப் மேலும் கூறினார்.
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தனது முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று பேசிய ட்ரம்ப் அமெரிக்கா ஈரானிடமிருந்து “அனைத்து அணுத் தூசியையும்’ பெற்றுக்கொள்ளும்” என்று கூறினார். ஆனால், “எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் பணம் கைமாறாது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

