Monday, October 5, 2026 9:02 am
இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சவுதி அரேபியாவின் ரியாட்டில் தனது புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வணிகப் பிரிவுத் தலைவர் திமுத்து தென்னகோன் ,அல்மோசாஃபர் டிராவல் (Almosafer Travel) நிறுவனத்தின் துணைத் தலைவர் சயீத் அல்ஃப்ரைஹ் ஆகியோர் இணைந்து இந்த புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நாட்டுக்கான முகாமையாளர் துசித விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். சவூதி அரேபியாவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பொது விற்பனை முகவராக அல்மோசாஃபர் டிராவல் நிறுவனம் செயல்படுகிறது.

