Monday, August 31, 2026 12:59 pm
தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகிவிட்டார். திமுகவை போல மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல் இணக்கமாக சென்று தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை பெறும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஒருபக்கம் விஜய் பிரதமர் ஆவார் என அவரின் ஆஸ்தான ஜோதிடர் சமீபத்தில் கூறினார்.
அதேபோல் சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ் தெரிந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என கூறினார். மேலும், சில தவெக எம்.எல்.ஏக்கள் எங்கள் தளபதி விஜய் பிரதமராக வருவார் என்றெல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இது காங்கிரஸினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்ந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‘பிரதமராக வேண்டும் என்ற எண்ணமும், நோக்கமும் முதல்வர் விஜய்க்கு துளியளவும் இல்லை. அவரின் கற்பனையில் கூட அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதால் அமைச்சர்கள் நினைத்து படி பேசக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதால் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும். எனவே இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் ’ என வைகோ கூறியிருக்கிறார்.

