Friday, September 11, 2026 5:50 pm
பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து மக்கள் மனதில் இடம்பிடித்த சாலமன் பாப்பையா காலமானார்.மதுரையில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக பணியாற்றியவர் சாலமன் பாப்பையா. தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக நிறைய உரைகளை இவர் எழுதியிருக்கிறார்.
தீபாவளி, பொங்கல் ,புது வருடம் போன்ற விஷேஷ நாட்களில்இவரின் பட்டிமன்ற நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் ஒளீபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். 2021ம் வருடம் இவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் கொடுக்கப்பட்டது. 90 வயதான சாலமன் பாப்பையா கடந்த சில நாட்களாக,உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

