Friday, September 11, 2026 7:53 pm
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அமெக்ரிகாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்து கால் நூற்றாண்டு நிறைவடைவதை, அரசியல் தலைவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உயிர் பிழைத்தவர்கள் , நாடு முழுவதிலுமுள்ள அமெரிக்கர்கள் வெள்ளிக்கிழமை அன்று அனுசரித்து வருகின்றனர்.இவ்வாண்டு விழாவில் , 9/11 தாக்குதல் தொடர்பான நோய்களால் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூடுதலாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸுடன், தற்போது உயிருடன் இருக்கும் அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் இந்த விழாவிற்காக மன்ஹாட்டனில் உள்ளனர். நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியும் அங்கு இருப்பதுடன், நகரம் முழுவதும் நடைபெறும் மற்ற நினைவஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்.ஜனாதிபதி ட்ரம்ப் பென்டகனில் அஞ்சலி செலுத்தினார்.
வெள்ளிக்கிழமை காலை தொடங்கவிருக்கும் நினைவு விழாவிற்காக , கீழ் மன்ஹாட்டனில் உள்ள 9/11 நினைவு மற்றும் அருங்காட்சியகத்தில் மக்கள் கூட்டம் திரண்டுள்ளது
ஒவ்வொரு ஆண்டும், 2001 தாக்குதல்களிலும் 1993 உலக வர்த்தக மையக் குண்டுவெடிப்பிலும் கொல்லப்பட்ட ஏறத்தாழ 3,000 பேரை நினைவுகூரும் வகையில் நகரமும் தேசமும் ஒரு கணம் நின்று அஞ்சலி செலுத்துகின்றன.
தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. இதுவரை மூன்று முறை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது — அவை, விமானங்கள் 11 , 175 உலக வர்த்தக மையத்தின் வடக்கு , தெற்கு கோபுரங்களில் மோதியதையும், விமானம் 77 பென்டகனில் மோதியதையும் நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளன.
அவை காலை 8:46, 9:03 மற்றும் 9:37 மணிக்கு நடைபெற்றன.
காலை முழுவதும் கூடுதல் மௌன அஞ்சலி செலுத்தப்படும்:
காலை 9:59 மணி – தெற்குக் கோபுரம் இடிந்து விழுந்தது
காலை 10:03 மணி – பென்சில்வேனியாவின் ஷாங்க்ஸ்வில்லில் விமானம் 93 விபத்துக்குள்ளானது
காலை 10:28 மணி – வடக்கு கோபுரம் இடிந்து விழுந்தது
மதியம் 12:13 – 9/11 தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் உயிரிழந்தவர்களுக்காகஅஞ்சலி செலுத்தப்பட்டது.

