Friday, September 11, 2026 7:23 pm
20வது ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதர்கு 156 வீரர்கள் கொண்ட குழுவை இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
இந்தக் குழுவில் 100 ஆண் ,56 பெண் விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இவர்கள் 25 விளையாட்டுப் பிரிவுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
நீச்சல் , மூழ்குதல், வில்வித்தை, கலைநய ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, படகோட்டம், ரக்பி செவன்ஸ், மேசைப்பந்து, ஸ்குவாஷ், பளுதூக்குதல், மல்யுத்தம், 3×3 கூடைப்பந்து, வுஷு, கபடி, கடற்கரை கைப்பந்து, தடகளம், குத்துச்சண்டை, கராட்டி, பாய்மரப் படகோட்டம், டேக்வாண்டோ, சர்ஃபிங், பூப்பந்து, கிரிக்கெட், கோல்ஃப், நவீன பென்டத்லான் , ஹொக்கி ஆகிய போட்டிகளில் இலங்கை வீரர்கள் போட்டியிடுவார்கள்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் டங்கன் வொயிட் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அணி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, அமைச்சக செயலாளர் ஏ.எச்.எம்.யு. அருண பண்டார, விளையாட்டுத் துறை பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன், இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் அசங்க செனவிரத்ன, பொதுச் செயலாளர் ரிஃப்டி ஃபஹ்மி ஆகியோர் உடனிருந்தனர்.
குழுத் தலைவர் எரண்ட கீகனகே செஃப் டி மிஷனாகவும், அசோக் ஜெயகுமார் பிரதி செஃப் டி மிஷனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

