Thursday, June 4, 2026 2:36 pm
ஜாங்மி புயலால் கடுமையான காற்று, பெருமழை,போக்குவரத்து துண்டிப்பு, மின் தடை காரணமாக ஜப்பானில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜாங்மி புயலின் மையம் டோக்கியோவிலிருந்து சுமார் 150 கிலோமீற்றர் தெற்கே இருந்தது. இது வினாடிக்கு 25 மீற்றர் வரை அதிகபட்ச தொடர்ச்சியான காற்றுடன் வடகிழக்கு நோக்கி நகர்வதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்தப் புயல் கிழக்கு ஜப்பானின் பசிபிக் பக்கத்திற்கு மிக அருகில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிக எச்சரிக்கை தேவை என்று அந்த மையம் மேலும் கூறியது.
985 hPa மைய அழுத்தத்தைக் கொண்ட இந்தப் புயலால், இதுவரை சுமார் 60,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பரந்த பகுதிகளில் வெள்ளம், விழுந்த மரங்கள், இடிபாடுகள் , நிலச்சரிவுகள் குறித்த தகவல்கள் அதிகாரிகளுக்குக் கிடைத்து வருவதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் மினோரு கிஹாரா வழக்கமான செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் புதன்கிழமை அன்று சுமார் 900 சர்வதேச , உள்நாட்டு சேவைகளை இரத்து செய்தன. இதனால் கிட்டத்தட்ட 90,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

