Sunday, September 20, 2026 12:23 pm
“செயற்கை நுண்ணறிவுப் படையை” (AI Force) உருவாக்கவிருப்பதாகவும், விரைவில் அதற்கான உயர்மட்டப் பொறுப்பாளர் ஒருவரை (“AI Czar”) அறிவிக்கவிருப்பதாகவும் அமெரிக்க ஜபாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) கணக்கில் பதிவிட்ட ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவுத் துறையின் “அழிவையோ அல்லது சிதைவையோ” வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போவதில்லை என்று கூறினார்.
“இந்த அற்புதமான துறையின் வளர்ச்சியை நாங்கள் எந்த வகையிலும் தடுக்கவோ அல்லது முடக்கவோ மாட்டோம். மாறாக, அது வளரும்போது அதை நாங்கள் போற்றி, அதற்குக் கைகொடுத்து, அதைக் கண்காணிப்போம்! அதே சமயம், இதில் உள்ள தீமைகளையும் நாங்கள் கண்டறிவோம்; ஏற்கனவே நடைமுறையில் உள்ள நமது குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதி அமைப்புகளின் மூலம் அதை மிக எளிதாகச் செய்ய முடியும்,” என்று ட்ரம்ப் கூறினார்.
செயற்கை நுண்ணறிவை அடுத்தகட்ட தொழிற்புரட்சி அல்லது இணையத்தின் வருகைக்கு இணையானதாக வர்ணித்த ட்ரம்ப், இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25 சதவீதம் வரை பங்களிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

